anantha sakthi kavasam

anantha sakthi kavasam

wav file for low mb and easy download

anantha sakthi kavasam mp3

anantha sakthi kavasam

chanted continuously to get full spiritual energy. close your eyes. hear the song. your brain will begin to emit alpha waves. you will get alpha mind power. ask anything in that transcendental stage you will get. write to me for doubts. I will guide you.

ஆனந்த சக்தி கவசத்தை பாடி மகிழுங்கள்

கந்த சஸ்டி கவசம் மெட்டில் ஆனந்த சக்தி கவசத்தையும் பாடி மகிழுங்கள்.மகனுக்கு ஒரு பாட்டு இருப்பதுபோல் அம்மாவுக்கும் ஒரு பாட்டு வேண்டும் அல்லவா.

you are

visitor

Saturday, December 3, 2011

anantha sakthi kavasam audio mp3

now available in audio format
in sulekha

to download

from mediafire

anantha sakthi kavasam lyrics

ஸ்கந்த சஸ்டி கவசம் மெட்டில் பாடுங்கள் :
காப்பு
அழைப்போர்க்கு அல்லல் போம்; துயரம் போம்; மனதில்
வைப்போர்க்கு வாழ்க்கை பெருகி வளம் ஓங்கும்
சித்தியும் சித்திக்கும் , அசோகர் அருள்
ஆனந்த சக்திக் கவசம் இதனை.
நல்லோர் துயர் தீர அசுரர் அழித்த
சக்தி அருள் நெஞ்சே குறி.
நூல்
நிலை மண்டில ஆசிரியப்பா
சக்தியை அழைக்க சடுதியில் வருவாள்
பக்தர்க்கு அருளும் பரமன் மனையாள்
பாதம் இரண்டில் கொலுசுகள் ஒலிக்க
கீதம் பாடும் கிண்கிணி சலங்கை …..004
பைய நடனம் செய்யும் பைந்தமிழ் எழிலாள்
கையில் சூலத்தோடு காக்க இங்கு வந்து
வருக வருக மலையாள் வருக
வருக வருக மாண்புடன் வருக …..008
எண்திசை வாழும் எண்மர் போற்ற
மண்தனை வளர்க்க சூலம் வருக
வளைக்கரம் வாழ்த்த வருக வருக
இன்பச் சிவனின் நினைவோள் வருக …..012
ஆறுமுகனின் அம்மா வருக
குங்குமம் அணிந்து கூடவே வருக
சிறந்த மகளே சீக்கிரம் வருக
சக்தியின் உருவே சடுதியில் வருக ….016
உமையவள் நீயே கிலி கிலி கிலி கிலி
அமைப்பவள் நீயே வழி வழி வழி வழி
வினைகள் அறுக்க வீரீ நமோ நம
கருணை வடிவே சரணம் சரணம் …..020
தசரதன் மகளே வருக வருக
அசுரரை அழித்த அம்மா வருக
எந்தனை ஆளும் எளிழோள் கையில்
பதினேட்டாயுதம் பாசாங்குசமும் ….024
கருணை விழிகள் கனிவுடன் திகழ
விரைந்தெனைக் காக்க விழியோள் வருக
ஐயும் கிளியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சவ்வும் உயிர் ஐயும் கிளியும் …..028
கிளியும் சவ்வும் கிலரொளி ஐயும்
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்
சக்தி நீயும் தனியொளி யவ்வும்
குண்டலி ஏறி குலமகள் வருக ……032
அன்னை முகமும் அருள் கூறும் அழகும்
செவ்வொளி நெற்றியும் நெடிய புருவமும்
பதினெட்டுக் கையும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவரத்ன சுட்டியும் …..036
எழில் சேர் செவியில் இலங்கும் குண்டலமும்
அன்பும் கருணையும் அருளும் நெஞ்சில்
பல்வகை மணியும் பதக்கமும் தரித்து
நல்வகை சேர்ந்த நவரத்ன மாலையும் ……040
உன்புகழ் பாடும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிருந்தியும்
முருகனின் மடியில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீறாவும் ……044
என் குகன் அமர்ந்த எழில் சேர் கால்களும்
சிறந்த கால்களில் கொலுசொலி இசைக்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகன …..048
நகநக நகநக நகநக நகன
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம் ஓம்ஓம்
ஸ்ரீம்ஸ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம் ஸ்ரீம்ஸ்ரீம் ……052
க்லீம்க்லீம் க்லீம்க்லீம் க்லீம்க்லீம் க்லீம்க்லீம்
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
உயிர்ச் சக்தி அவளே உள்ளே இருப்பாள்
முந்து முந்து முன்னாள் முந்து …..056
எந்தனை ஆளும் என்னுயிர் அம்மா
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவு
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதம் என்று …..060
உன் திருவடியை உறுதியாய் பற்றி
என்தலை வைத்தேன் இணையடி காக்க
என்னுயிர்க்கு உயிரே என் அம்மா காக்க
பண்புடை விழியால் என்னைக் காக்க ……064
அடியவன் வதனம் எழில் சூல் காக்க
சிகப்பு சேர் நெற்றியை சீர் சூல் காக்க
கலங்கும் கண்களை கருஞ் சூல் காக்க
செவிகள் இரண்டும் செஞ் சூல் காக்க …..068
நாசிகள் இரண்டும் நல் சூல் காக்க
பேசும் வாய்தனை பெருஞ் சூல் காக்க
முப்பத்திருபல் முனி சூல் காக்க
செந்தமிழ் நாவை செஞ் சூல் காக்க …..072
கன்னம் இரண்டை கதிர்சூல் காக்க
என்னிளம் கழுத்தை இனி சூல் காக்க
மார்பை ரத்ன வடி சூல் காக்க
சேர்ந்த நெஞ்சினை நேர் சூல் காக்க ……076
வடிசூல் இருதோள் வனப்புடன் காக்க
பிடரிகள் இரண்டும் பெரும் சூல் காக்க
அழகிய முதுகை அருள் சூல் காக்க
பளு பதினாறும் பரு சூல் காக்க …..080
வெற்றி சூல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுற செஞ் சூல் காக்க
அரை ஞான் கயிற்றை அருள் சூல் காக்க
ஆண் பெண் குறிகளை அழகு சூல் காக்க ……084
பிட்டம் இரண்டும் பெரும் சூல் காக்க
வட்டக் குதத்தை வல் சூல் காக்க
பனைத் தொடை இரண்டும் பரு சூல் காக்க
கணைக்கால் முழங்கால் கதிர் சூல் காக்க ……088
ஐவிரல் அடியினை அருள் சூல் காக்க
கைகால் இரண்டும் கருணை சூல் காக்க
முன்கை இரண்டும் முரண் சூல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க ……092
நாவில் சரஸ்வதி நற்துனை ஆக
நாபிக் கமலம் நல்சூல் காக்க
முப்பால் நாடியை முனை சூல் காக்க
எப்பொழுதும் என்னை எதிர் சூல் காக்க …..096
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக சூல் காக்க
வரும் பகல் தன்னில் வச்ர சூல் காக்க
அரை இருள் தன்னில் அரும் சூல் காக்க ……100
ஏமத்தில் சாமத்தில் எதிர் சூல் காக்க
தாமதம் நீக்கி சதுர் சூல் காக்க
காக்க காக்க கனக சூல் காக்க
நோக்கும் போதே நோய்கள் நீங்கும் …..104
தாக்கும் போதே தடைகள் தகரும்
பார்க்கும் போதே பாவம் அழியும்
பில்லி சூன்யம் பெரும்பகை அகலும்
வலிய பூதம் வாலாட்டும் பேய்கள் ……108
அல்லல் தருகின்ற அடங்கா முனிகள்
பிள்ளைகள் கொல்லும் பின்வீட்டு பேயும்
கொள்ளிக்கண் பேய்களும் குணங்கெட்ட பேய்களும்
பெண்களைத் தொடரும் பேதைப் பேய்களும் ……112
அடியனைக் கண்டால் அங்கேயே அழிந்திட
இரத்தக் காட்டேரி இறுமாப்பு படைகள்
இரவிலும் பகலிலும் எதிர் வரும் தீயரும்
கண்டதும் உண்ணும் காளியோடு அனைத்தும் …..116
விடாது தொடரும் வினை மிகு பேய்களும்
தண்டியம் செய்யும் சண்டாளர்களும்
என் பெயர் கேட்டதும் இடி விழுந்து நடுங்கிட
அறியாது வைக்கும் அற்பப் பொம்மைகள்  …..120
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
கைகால் நகங்களும் மண்டை ஓடும்
பொம்மைகள் உடனே பானையில் வைத்த
வீட்டினில் வைக்கும் வினை பிடித்தோர்கள் …..124
பொம்மையில் ஆணியை அடித்தே வைத்து
காசு பணத்துடன் சோற்றையும் வைத்து
குங்குமம் ஜபித்து கூடவே வைத்தோர்
அடியேனைக் கண்டால் அலறி அழிந்திட ……128
பகையும் தீயோரும் வந்து வணங்கிட
எமனின் ஆட்கள் எழுந்து ஓடிட
பயந்து அழுது பாய்ந்து ஓடிட
மனமும் கலங்கி மறைந்து ஓடிட …..132
கற்களில் முட்டி கயற்றால் கட்டி
உடம்பெல்லாம் நோக உடனே கட்டு
எலும்புகள் உடைய எட்டி உதைத்து
கட்டும் கட்டில் கைகால் நொறுங்க …..136
அடிக்கும் அடியில் கண்கள் வெளிவர
சிறு சிறு துண்டாய் சீவிப் போடு
அரு அரு என்றே பகையை அறுத்திடு
சொருகு சொருகு சூலம் சொருகு …..140
நெருப்பு அவர்கள் நெஞ்சில் பற்றிட
எரியட்டும் நெருப்பு என்றென்றும் அங்கே
சூலத்தை எறிவாய் சூழ்ந்தது ஓட
புலிகள் நரிகள் பொல்லாத நாய்கள் …..144
எலிகள் கரடிகள் எல்லாம் ஓட
தேள்கள் பாம்புகள் சீயான் பூரான்கள்
பாழ் பட்டுப் போன பூச்சிகள் கடித்து
ஏறிய விஷமும் உடனே இறங்க ……148
காயங்கள் சுளுக்குகள் கதறும் தலைவலி
வாதம் காய்ச்சல் வலிப்பு நோய்கள்
சூலை சயம் குன்மம் சொரியும் சிரங்கும்
வலிகள் புண்கள் வயற்று நோய்கள் …..150
ராஜ பிளவைகள் ராத்திரி நோய்கள்
பூனை நாய் சிலந்திக் கடிகள்
பல்வலி அரணை ஆப்புக் கட்டிகள்
எல்லா நோய்களும் என்னைக் கண்டதும் ……154
கதறி ஓட கருணை புரிவாய்
அனைத்து உலகமும் அன்புடன் உறவாட
ஆண் பெண் அனைவரும் நட்பாக
நாட்டை ஆள்வோரும் நட்புடன் உதவ …..160
உன்னை நம்பி உன் பெயர் சொல்ல
சக்தியும் நீயே சகலமும் நீயே
திரிபுர சுந்தரி தினமும் நீயே
சப்தமும் நீயே சலனமும் நீயே …..164
விஷ்ணுவின் தங்கை வேந்தனின் மங்கை
தேவரைக் காக்க திரிசூல் எடுத்தாய்
மாந்தரைக் காக்கும் மகிமை அவளே
காலனை அழித்து ககனம் காப்பாய் …..168
எல்லோரையும் காக்க இப்போதே வருவாய்
தணிகையை ஆளும் சங்கரன் மனையாள்
காஞ்சி நகர் அமர் காமாக்ஷி தாயே
மதுரை அரசாலும் மாபெரும் அரசி …..172
கருக்காவூர் காத்த கருணைத் தெய்வம்
மாங்காடு அமர்ந்த மங்கையர்க்கரசி
காசியில் சிரிக்கும் விசாலாக்ஷி தாயே
கலைகளின் அரசி கலைமகள் என்றும் ….176
என்னிடம் இருக்க நான் தினம் பாட
என்னுள் இருக்கும் எந்தன் தாயை
பாடுவேன் தினமும் பைந்தமிழ் மொழியால்
ஆடினேன் பாடினேன் ஆனந்தத்தாலே ……180
கொஞ்சும் அழகுடன் குங்குமம் அணிய
பாழும் வினைகளும் பாவமும் நீங்கி
உன் அடி சேர உன் அருளாலே
அன்புடன் தருவாய் கல்வியும் செல்வமும் …..184
நல்ல வாழ்வும் நலமும் பிறவும்
சீரும் சிறப்பும் சித்திகள் பெருக
வாழ்க வாழ்க வளைக்கரம் வாழ்க
வாழ்க வாழ்க திரிசூல் வாழ்க ……188
வாழ்க வாழ்க மதுரைக்கு அரசி
வாழ்க வாழ்க வாழ்த்தும் சிவனுடன்
வாழ்க வாழ்க சிம்மம் ஏறினாள்
வாழ்க வாழ்க என் துயரங்கள் நீங்க …..192
ஏதேனும் பிழைகள் ஏதேனும் தவறுகள்
ஏதேனும் குறைகள் செய்திருந்தாலும்
பெற்றவள் நீதான் பொருப்பவள் நீதான்
தந்தை சிவன்தான் தாயும் நீதான்  ….196
உன் பிள்ளை என்மேல் அன்பாய் இருந்து
உன் மகன் என்மேல் உயிராய் இருந்து
உன்னிடம் வந்தோர் உயர்ந்திட வழி செய்
ஆனந்த சக்தி கவசம் விரும்பிய ….200
அசோக ஆனந்த சித்தன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கவனமாய் தினமும்
நன்றாய் குளித்து நல் துணி அணிந்து
நினைவு தடுமாறாது நிற்கும் நிலையில் …..204
ஆனந்த சக்திக் கவசம் இதனை
சிந்தை ஒன்றாகி தியானிப்பவர்கள்
ஒரு நாள் முப்பத்தாறுருக்கொண்டு
ஓதியே ஜபித்து சிகப்பும் அணிய …..208
எட்டுத் திக்குள்ள எண்மரும் அடங்குவர்
செயல்களில் எல்லாம் வெற்றியை தருவர்
எதிரிகள் எல்லாம் எப்போதும் வணங்குவர்
சூரியன் முதலோர் சூழ்ந்து உதவுவர் ……212
எப்போதும் என்றும் இளமையாய் வாழ்வர்
என்றும் பதினாறாய் எப்போதும் இருப்பர்
அன்னையின் கையிலுள்ள அருள் சூலத்தை
பாதையாய் வைத்து பயணம் செய்க …..216
கண்ணால் காண கடும் பேய் ஓடும்
தீயோரெல்லாம் தீய்ந்து கருகுவர்
நல்லவர் நெஞ்சில் நாளும் நிற்கும்
அல்லவர் தீயோர் அழிக்கும் சூலை …..220
எந்தன் உள்ளம் எந்நாளும் அறிந்து
வீரலக்ஷிமை விரும்பிடும் தினமே
சூரனை அழித்து துன்பம் நீக்கி
தேவர்களுக்கு தேனின்பம் தந்து …..224
காஞ்சிபுரத்தில் கடும் தவம் செய்த
செல்லக் கால்களில் சேர்வோம் இன்றே
என்னை ஆட்கொண்டு எந்தன் நெஞ்சில்
எப்போதும் இருக்கும் அம்மா போற்றி …..228
தேவர்கள் நெஞ்சில் வாழ்வாய் போற்றி
பரமனின் நெஞ்சின் மகிழ்வே போற்றி
அருள் மிகு அழகு அம்மா போற்றி
அரக்கரை அழித்த அன்பே போற்றி …..232
காமாக்ஷி போற்றி கருணை போற்றி
வெற்றி பெறுகின்ற சூலே போற்றி
திரிபுரசுந்தரி புவனத்தரசி
ஸிம்ஹவாஹிநி சீரடி சரணம் …..236
சரணம் சரணம் அம்மா சரணம்
சரணம் சரணம் சக்தியே சரணம்